பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பிரம்மாண்டத்திற்கே பிரம்மாண்டம்.. இயக்குனர் சங்கரின் பிறந்தநாள் இன்று.!
பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டம் என்றால் அது தமிழ் திரையுலகை பொருத்தவரையில் இயக்குனர் சங்கர் தான். கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர்.
தனது முதல் திரைப்படத்திலேயே "சிறந்த தமிழ் இயக்குனர்" என்ற விருதையும் பெற்றார். இயக்குனர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி ஒரு மிகச்சிறந்த வெற்றி கூட்டணி என்றுதான் கூற வேண்டும். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து பணியாற்றிய பல படங்கள் உலகளவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்து டிப்ளமோ மெக்கானிக்கல் பயின்ற சங்கர், அன்றைய பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் எழுத்தாளராக பணியாற்றி பின்னாளில் இயக்குனராக மாறினார்.
ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சங்கர் தெலுங்கில் ஆர்சி 15 என்ற படத்தையும், தமிழில் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார்.
இதில் வெயில் படத்திற்காக தேசிய திரைப்பட விருதும், ஜென்டில்மேன், காதலன், அந்நியன் திரைப்படத்திற்காக தென்னிந்திய பிலிம் பேர் சிறந்த இயக்குனர் விருது, ஜென்டில்மேன் இந்தியன், அந்நியன், சிவாஜி ஆகிய படத்திற்காக சிறந்த தமிழ் இயக்குனர் விருது, விஜய் அவார்ட்ஸ், ஆனந்த் விகடன் அவார்ட்ஸ் போன்றவற்றையும் பெற்றுள்ளார்.
இன்று பிரம்மாண்டங்களின் நாயகனாக ரசிகர்களால் கருதப்படும் இயக்குனர் சங்கருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது அவருக்கு 58 வயதாகிறது.