மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவலில் தயாராகும் இந்தியன் 2; அமெரிக்காவின் உயரிய VFX அலுவலகத்தில் ஷங்கர்.!
ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், ப்ரியா பவானி ஷங்கர், ராகுல் பிரீத்தி சிங், நயன்தாரா, சித்தார்த், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2.
கடந்த 1996ம் ஆண்டு கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகிய இந்தியன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
தற்போது இந்தியன் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் நடித்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் மறைந்துவிட்டனர்.
இவர்களின் காட்சி உட்பட படத்தை மெருகூட்ட முடிவு செய்த ஷங்கர், அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் லோலா வி.எப்.எக்ஸ் (Lola VFX) நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
இந்த புகைப்படத்தை ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Scanning the advanced technology at Lola VFX LA ✨#Indian 2 pic.twitter.com/816QYA7sCN
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 23, 2023