மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோவாகிறாரா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்? அவருக்கு இப்படியொரு ஆசையா.! விளக்கமளித்தார் பிரபல தயாரிப்பாளர்!
மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் இப்படம் கொரோனா பரவல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ரிலீசாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சஞ்சய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோவின் புதிய படத்தில் ஹீரோவாகிறார் எனவும், கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பட வேலைகள் துவங்கும் எனவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் பிரிட்டோ பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராகதான் அதிக ஆர்வம் உள்ளது. மேலும் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து கூட எனக்கு தெரியாது. அவர் படிப்பை முடித்த பிறகுதான் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார் என தெரியும்.
சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக பரவிவரும் செய்தி உண்மையில்லை. அது முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசியதே கிடையாது என அவர் கூறியுள்ளார்.