மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாணாக்காரன் இயக்குனருடன் இணையும் சூர்யா? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் கோடை விடுமுறையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த 2 திரைப்படங்களுக்குமே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார்
இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா, டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.