திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினி இல்லை.. சந்திரமுகி 2 படத்தில் இவர்தான் ஹீரோ! ஷூட்டிங் எப்போ தெரியுமா? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!!
கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, மாளவிகா, வினித் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மிரட்டலான, திகில் படமான இப்படம் பெரும் வசூல் சாதனையும் படைத்தது. இந்தநிலையில் சந்திரமுகி 2 படத்தை இயக்குனர் வாசு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பி.வாசு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று பரவிய தகவல் உண்மை இல்லை. சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. இதன் கதை வேறு மாதிரி இருக்கும். ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிப்பார் என்று கூறியுள்ளார்.