#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்யோ, அஜித்தோ தரப்போவதில்லை. சினிமாவை இழுத்து மூடுங்கள்! கொந்தளித்த பிரபல இயக்குனர்!
வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். தற்போது ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன். இந்நிலையில் ஜெயில் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் தமிழ் சினிமாவை இழுத்து மூடிவிடுங்கள் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் படங்களில் நடிக்கவேண்டும், இவர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என பலருக்கு ஆசை உள்ளது. ஆனால், விஜய்யோ அல்லது அஜித்தோ நமக்கு கால் சீட் தரப்போவதில்லை, அதேபோல சிறு சிறு படங்கள் வெளியாவதும் உடனே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிடுகிறது.
மலையாளம், தெலுங்கு படங்கள் இவாறு வெளியாவதில்லை. தமிழ் படங்கள் மட்டும் ஏன் வெளியாகுகிறது? விஷால் என்ன செய்கிறார்? இதற்காத்தானே வருவதாக சொன்னார் ஆனால் இன்றுவரை தமிழ் ராக்கர்ஸை அவரால் தடுக்க முடியவில்லை.
முதலில் திரையுலகை மூடிவிட்டு திருட்டுதனமாக படங்கள் வெளியாவதை தடுத்து நிறுத்துங்கள். அதன் பிறகு படங்களை இயக்க தொடங்கலாம் என கோவமாக கூறியுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.