திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெங்கட் பிரபு சூர்யா திடீர் சந்திப்பு... சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்... வெங்கட் பிரபு விளக்கம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. 2021 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான கஸ்டடி என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அவரது 68-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படத்தில் முதல் முறையாக விஜய் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைய இருக்கிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான திரைப்படமாக தளபதி 68 உருவாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார் வெங்கட் பிரபு. இதனால் தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவை இயக்க இருக்கிறாரா? என கோலிவுடில் செய்திகள் பரவின.
And this happened at the airport!!! Met @Suriya_offl na after ages!! Lovely catching up na❤️🤗 pic.twitter.com/fmMJ4ucRNy
— venkat prabhu (@vp_offl) September 5, 2023
இதற்கு அந்த பதிவிலேயே பதில் அளித்திருக்கும் வெங்கட் பிரபு எதிர்பாராமல் விமான நிலையத்தில் வைத்து நடைபெற்ற சந்திப்பு என்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சூர்யா மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற மாசிலாமணி திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.