மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நடிப்பதற்கு என்னால் முடியாது" திட்டவட்டமாக மறுத்த இயக்குனர் வெற்றி மாறன்.!
தனுஷ் நடித்த "பொல்லாதவன்" திரைப்படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருப்பவர் வெற்றி மாறன். மேலும் இவரது இரண்டாவது திரைப்படமும் தனுஷை வைத்து தான் இயக்கினார்.
இவரது இரண்டாவது திரைப்படமான "ஆடுகளம்" சிறந்த இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் உட்பட ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. தற்போது படங்களை தயாரித்தும் வரும் வெற்றி மாறன், நான் ராஜாவாகப் போறேன், காக்கா முட்டை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் மாயவலை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் அமீர், "நான் வெற்றி மாறனை நடிக்க வைக்க விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், " நடிப்பதற்கு என்னால் நிச்சயமாக முடியாது.
நடிப்பும், இயக்கமும் இரண்டு வழிப்பயணம்" என்று கூறினார். இதுகுறித்து நடிகர் போஸ் வெங்கட் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, " நல்ல தரமான திரைப்படங்களை கொடுக்க கூடியவர் வெற்றிமாறன். அவரை நடிக்க அழைக்க வேண்டாம். அவரை சுதந்திரமாக விடுங்கள்" என்று கூறியுள்ளார்.