#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளைஞர்களை இயக்கத்தால் கட்டிப்போட்ட நாயகன் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.!
கடலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் சித்திரவேல் - எழுத்தாளர் மேகலாவுக்கு 1975 செப் 4 ஆம் தேதி மகனாக பிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் சொற்பளவே என்றாலும், அவரின் பெயர் தெரியாத இளைஞர் பட்டாளம் இல்லை. கல்லூரி படிப்புக்கு பின்னர் சினிமா மீது மோகம் கொண்ட வெற்றிமாறன், லயோலா கல்லூரியில் படித்து வரும்போதே இயக்குனர் பாலுமகேந்திராவிடம் துணை இயக்குனராக பணியாற்ற கல்லூரி படிப்பையும் துறந்து சென்றவர்.
கடந்த 2007-ல் தனுஷுடன் சேர்ந்து பொல்லாதவன் திரைப்படம் மூலமாக பலரையும் கவர்ந்த வெற்றிமாறன், அடுத்தபடியாக 2011-ல் ஆடுகளத்தில் இணைந்து கலக்கி இருந்தனர். இவர்களின் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதை உணர்த்தும் வகையிலேயே சிறப்பாக அமைந்து இருந்தது. அதனைதொடர்ந்து, விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இறைவன் மிகப்பெரியவன், வாடிவாசல், அதிகாரம் படங்கள் விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது.
திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் வெற்றிமாறன் உதயம் என்.எச்.4, நான் ராஜாவாகப்போறேன், பாவக்கதைகள் போன்ற படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார். இன்றுள்ள இயக்குனர்களில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வயது 46 ஆகிறது. இவர் தனது கல்லூரி காதலியான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.
வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைப்படமும் பல விருதுகளை வென்று குவித்துள்ளது. விஜய் அவார்ட்ஸ், தென்னிந்திய திரைப்பட விருது, சிறந்த இயக்குனர், சிறந்த எழுத்தாளர், சைமா அவார்ட்ஸ், ஆனந்த விகடன் அவார்ட்ஸ், தமிழ்நாடு அரசு திரைப்பட விருது, தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.