என்னது இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்களா.? அதுவும் யார் யாருன்னு பார்த்தீர்களா!



director-vijay-next-movie-detail-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான  படங்களை இயக்கி,  பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல் விஜய். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் படத்தை இயக்கியதன் மூலம்  இயக்குனராக அறிமுகமானார். அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் மதராசப்பட்டினம் , தெய்வத்திருமகள், தலைவா என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தற்போது கூட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் சினிமாவாக இயக்கியுள்ளார்.

இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஓடிடி தளத்திற்காக திரைப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

director vijay

மேலும் இந்த திரைப்படம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டதாகவும், நான்கு யுகங்கள் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது 
நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் உள்ளிட்ட நான்கு முக்கிய நடிகைகள் நடிக்கின்றனர் எனவும்,  பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.