வாவ்.. செம க்யூட்! இயக்குனர் ஏ.எல் விஜய்யின் குட்டி மகனை பார்த்துருக்கீங்களா! முதல்முறையாக வைரலாகும் புகைப்படம்.



director-vijay-wife-and-son-photo-viral

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து,பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல் விஜய். கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் படத்தை இயக்கியதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் மதராசப்பட்டினம் , தெய்வத்திருமகள், தலைவா என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தற்போது கூட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் சினிமாவாக இயக்கியுள்ளார்.

director vijay

இவருக்கு 2014 ஆம் ஆண்டு நடிகை அமலாபால் உடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் ஏ. எல் விஜய் 2019 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் இயக்குனர் விஜய் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.