திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த பெரிய இயக்குனர்கள் எல்லாம் படத்திலும் நடித்திருக்கிறார்களா.? யாரெல்லாம் தெரியுமா!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து இன்று முக்கிய மற்றும் முன்னணி இயக்குநரகளாக இருக்கும் இயக்குனர்கள் பலரும், பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளனர். அதில் டாப் இடங்களில் இருக்கும் இயக்குனர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய பிரம்மாண்ட படங்களை எடுத்து வெற்றி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், 1990ம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார்.
வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த இயக்குனர் கெளதம் மேனன் 1997ம் ஆண்டு "மின்சாரக்கனவு" படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
எதிரும் புதிரும் படத்தில் டாக்டராக நடித்த பேரரசு, தொடர்ந்து தன்னுடைய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தார். 1997ம் ஆண்டு "பூச்சூடவா" படத்தில் ஒரு சின்ன காமெடி ரோலில் நடித்த ஏ. ஆர். முருகதாஸ், அதன் பின்னர் சில படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார்.