மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகராவதற்கு முன்பு சூர்யா எங்கு, எவ்வளவு சம்பளத்திற்கு வேலை செய்தார் தெரியுமா?
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பை தாண்டி சமூக தொண்டான அகரம் அறக்கட்டளையை நிறுவி கீழ்த்தர மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கிடைக்க பெற செய்ய உதவி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்க வருவதற்கு முன்பு கார்மென்ஸில் தான் வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அங்கு வேலை செய்த போது அவர் வாங்கிய சம்பளம் ₹1200.சூர்யா தான் வாங்கிய முதல் சம்பளத்தில் தனது தாய்க்கு ஆரஞ்சு நிறத்திலான புடவையை வாங்கி தந்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு கார்மென்ஸில் வேலை பார்க்கும் போது சொந்தமாக ஒரு பேக்கரி வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக வங்கியில் கடன் வாங்கலாம் என்று நினைத்த போது அது குடும்பத்தை பாதிக்கும் என்று எண்ணிய சமயத்தில் தான் இயக்குனர் மணிரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
அதனை அடுத்து சூர்யா வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடித்துள்ளார்.