திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அமீர் - பவானி திருமணம் எப்போது தெரியுமா? அமீர் சொன்ன பதில்..!
அமீர் மற்றும் பவானி இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமான ஜோடிகள். இவர்கள் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அமீர் மற்றும் பவானி இருவரும் சில காலமாக டேட்டிங் செய்து வருகின்றனர். அவர்களின் திருமணம் எப்போது என்று அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பவானியிடம் தொகுப்பாளர் அவர்களது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமீர், "நாங்கள் இருவரும் சில மாதங்களாக காதலிக்கிறோம். இப்போது ஏன் திருமணம் செய்ய வேண்டும் ? பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே பவானியிடம் என் காதலை கூறினேன்.
பவானி எனது காதலுக்கு ஆகஸ்ட் மாதம் தான் ஒப்புதல் அளித்தார். நாங்கள் காதலிக்க ஆரம்பித்து தற்போது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில காலங்கள் காதலிக்க ஆசைப்படுகிறோம். அத்துடன் திருமணம் நடக்கும்போது நிச்சயம் அறிவிப்போம் என்று கூறியுள்ளார். அத்துடன் அஜீத் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் அமீர் மற்றும் பவானி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.