மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டான் திரைப்படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.மேலும் கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள டான் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் டான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் சாதனை படைத்தது என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டும் டான் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் 32 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இதோ நிலை நீடித்து கொண்டு போனால் டான் 100 கோடி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.