உலகம் முழுவதும் இதுவரை சிவகார்த்திகேயனின் டான் படம் எவ்வளவு வசூல் சாதனை படைத்துள்ளது தெரியுமா.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!



Don movie World wide box office collection

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் டான். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Don movie

இந்நிலையில் டான் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் சாதனை படைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டான் திரைப்படம் தமிழகம் முழுவதும் இதுவரை 32 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாம். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.