மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட..சூப்பர்! ரொமான்ஸ் செய்ய நம்ம சிவகார்த்திகேயன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா! வெளியான புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இதில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சூரி,புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ராவில் தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.