திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நீங்க அந்த குள்ளநரிய பார்த்தீங்களா?.. குள்ளநரி திருடவே கூடாது.. மீண்டும் ஒளிபரப்பாகும் டோராவின் பயணங்கள்.!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கார்ட்டூன் பார்க்காத ஆட்களே இல்லை என கூறலாம். தொலைக்காட்சிகளில் பல கார்ட்டூன்கள் ஒளிபரப்பப்பட்டாலும், அவற்றில் சில கார்ட்டூன் தான் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும். அப்படியாக அனைவருக்கும் பிடித்த காட்டும் தான் டோராவின் பயணங்கள்.
நிக்லோடியன் சேனலில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்த டோராவின் பயணங்கள், தமிழில் சுட்டி டிவியிலும் கடந்த 2000-ம் ஆண்டு ஒளிபரப்பாகியது. ௯௦'ஸ் கிட்ஸின் ஃபேவரட் கார்ட்டூன் நிகழ்ச்சி எனவும் கூறலாம். கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த கார்டூனின் டோரா, புஜ்ஜி, குள்ளநரி போன்ற கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
இந்த நிலையில் டோராவின் பயணங்கள் மீண்டும் சுட்டி டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 90'ஸ் கிட்ஸ் ரசிகர்கள் மிகவும் குஷியாகியுள்ளனர்.