மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடையாளம் தெரியாமல் மாறிப்போன மலையாள நடிகர்.. என்ன காரணம் தெரியுமா.?
மலையாள நடிகரான டோவினோ தாமஸ் 2012ம் ஆண்டு வெளிவந்த "பிரபுவிந்தே மக்கள்" என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரனுக்கு அடுத்தபடியாக அனைவராலும் விரும்பப்படும் நடிகராக டோவினோ தாமஸ் உள்ளார்.
மிகவும் வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் டோவினோ தாமஸ், அந்தக் கதாப்பாத்திரங்களுக்காக மிகவும் மெனக்கெட்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு நடிக்கக் கூடியவர். யதார்த்தமாக நடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்.
அந்தவகையில், தன் உடல் எடையைக் கூட்டியோ அல்லது குறைத்தோ, தன்னுடைய தோற்றத்தில் மாற்றம் கொண்டு வந்து, அந்தக் காதாப்பாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய நடிகர்களில் டோவினோவும் ஒருவர். இந்நிலையில் தற்போது "அதிரிஷிய ஜலகங்கள்" படத்தில் நடித்து வருகிறார்.
விருதுப்படங்களை இயக்கி பெயர் பெற்ற இயக்குனர் டாக்டர் பைஜூ இயக்கும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் டோவினோ இருக்கும் புகைப்படம் வெளியாகி, டோவினோ தாமசா இது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.