மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமூக வலைதளங்களுக்கு இடைவேளை விட்ட லோகேஷ் கனகராஜ்.! காரணம் என்ன தெரியுமா.?
பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளதால், சமூக வலைதளங்களிலிருந்து இடைவேளை எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், 'ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்துக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடுத்த படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளேன். இந்தக் காலக்கட்டத்தில் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பேன். பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவிட்டியை புறந்தள்ளுங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றி கொடுத்த உந்துதலில் லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.