'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
"ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் ரஜினிக்காக இல்லை அஜித்க்காக தான்" பிரபல நடிகர் சொன்ன உண்மை...!!!
ரஜினி ரசிகர்களால் மட்டுமல்லாமல் அனைவராலும் இன்றுவரை கொண்டாடப்பட்டுவரும் பாடல்..."ஸ்டைலு ஸ்டைலு தான்.. இது சூப்பர் ஸ்டைலு தான்.." பாடல் ஆகும். மறைந்த கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை, மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபி, மற்றும் பாடகி கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர். இசையமைப்பாளர் தேவா இந்தப் பாடலுக்கு இசையமைத்து இருந்தார்.
இன்றுவரை ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்பாடல்,முதலில் ரஜினிக்கு போடப்பட்ட பாடல் இல்லை. நடிகர் அஜித்குமாருக்குத் தான் இந்த பாடல் போடப்பட்டது என்று, தற்போது பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் மாரிமுத்து கூறியுள்ளார்.
அதைப்பற்றி மேலும் மாரிமுத்து கூறியதாவது, "ஆசை படத்தில் இயக்குனர் வசந்த் சாருக்கு உதவி இயக்குனராக நான் பணியாற்றியபோது, இசையமைப்பாளர் தேவா தான் அப்படத்திற்கு இசையமைத்தார். அந்த சமயத்தில், ஆசை படத்தில் நடிகர் அஜித்திற்காகத் தான் 'ஸ்டைலு ஸ்டைலு..' பாடலை தேவா இசையமைத்துக் கொடுத்தார். ஆனால் இயக்குனர் அந்தப் பாடல் திருப்தியாக இல்லை. இன்னும் மெலடியாக ஒரு பாடல் தான் வேண்டும் என்று இயக்குனர் கேட்டதால், 'மீனம்மா மீனம்மா..' பாடலை இசையமைப்பாளர் தேவா கொடுத்தார்.
'மீனம்மா..' பாடலை தேவா ஏற்கனவே இசையமைத்து வைத்திருந்தார். இயக்குனர் வசந்த் ஸ்டைலு ஸ்டைலு தான்.. பாடல் வேண்டாம் என்று கூறி விட்டதால், அந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா, அதை ரஜினியின் பாட்ஷா படத்திற்கு கொடுத்துவிட்டார். இரண்டு படத்திற்குமே தேவா தான் இசையமைத்திருந்தார். இரண்டு பாடல்களுமே சூப்பர்ஹிட்டானது" என்று மாரிமுத்து கூறினார்.