#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் நாயகி ஈஸ்வரியின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
2002ம் ஆண்டு "பைவ் ஸ்டார்" படத்தில் அறிமுகமானார் கனிகா. தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் ஸ்ரேயா, சதா, ஜெனிலியா ஆகியோருக்கு சில படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். தற்போது சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான "எதிர்நீச்சல்" தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியளித்த கனிகா, "எனது அம்மா புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி நிறைய பேசுவார். ஆனால் அவரே அதில் மாட்டிக்கொண்டார். அவர் மார்பில் வலி இருப்பதாக சொன்னார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் புற்றுநோயை உறுதிசெய்து அதிர்ச்சியளித்தனர்.
அம்மா மிகவும் சென்சிட்டிவான ஆள். ஆனால் நான் எதையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தி விடமாட்டேன். நான் அழுத்தமான நேரங்களில் காரில் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு கதறி அழுவேன். என் இயல்பு இதுதான். என் அம்மா பட்ட வேதனையை எப்போதும் மறக்க முடியாது" என்று கூறியுள்ளார்.