#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம்" கடுப்பான எதிர்நீச்சல் சீரியல் நடிகை நந்தினி..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். பல எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்களையும், பெண் அடிமைத்தனத்தையும் குறிப்பிட்டு காட்டுவதால் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன.
இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹரிப்ரியா. இவர் இதற்கு முன்னதாக பல சீரியல்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியலின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இது போன்ற நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது. "நான் எனது வாழ்வில் பல கஷ்டங்களையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்துள்ளேன். எந்த விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று ஒவ்வொன்றிலும் தானாகவே படிப்படியாக கற்றுக் கொண்டேன்.
எனவே யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம். கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் நான் தான் என்னை பார்த்துக் கொள்கிறேன். அட்வைஸ் செய்பவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை" என்று காட்டமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.