திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வடிவேல் பாலாஜியின் வீட்டிற்குள் நுழைந்த திருடன்! அவரது போட்டோவை பார்த்ததும் என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. 45 வயது நிரம்பிய அவர் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, கை கால்கள் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேலு பாலாஜியின் இந்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரை நினைவுகூறும் வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய பிரபலங்கள் வடிவேல் பாலாஜி குறித்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்தனர்.
🙏🙏🙏🙏
— Vijay Television (@vijaytelevision) October 4, 2020
மிஸ் யூ வடிவேல் பாலாஜி - இன்று மதியம் 1 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #MissYouVadivelBalaji #VijayTelevision pic.twitter.com/NG17kawvG9
அதாவது ஒருமுறை பாலாஜி வீட்டிலிருந்த அனைவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, அவர்களது வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த வடிவேல் பாலாஜியின் போட்டோவை பார்த்துவிட்டு அவர்கள், மன்னித்து விடுங்கள் அண்ணா, இது உங்களது வீடு என தெரியாமல் திருட வந்துவிட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை நெகிழ்ச்சியுடன் இதுதான் வாழ்க்கை என கூறி ஈரோடு மகேஷ் பகிர்ந்துள்ளார்.