மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இசைஞானியின் உண்மையான நண்பன் யார் தெரியுமா? அவரே சொல்கிறார் பாருங்கள்.!
இசைஞானி இளையராஜா என்னுடன் நெருங்கிப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் கிடையாது என்னுடைய உண்மையான உற்ற நண்பன் என்னுடைய ஆர்மோனியம் தான் என்று கூறியுள்ளார்.
இசையை விரும்புகிறவர்கள் அனைவரும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒதுக்கிவிட முடியாது. இன்றைய இளம் தலைமுறையினர் இடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பவர் இசைஞானி. இன்பம், துன்பம், மகிழ்ச்சி, காதல், நட்பு என அனைத்து மனநிலையில் உள்ளோருக்கு அவருடைய இசையில் பதில் உண்டு.
காலத்தால் அழியாத அனைவரும் விரும்பக்கூடிய இசையினை கொடுப்பதால் தான் அவர் இசைஞானி என்று அழைக்கப்படுகிறார் எனலாம்.
கோவை தனியார் கல்லூரியின் 75ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இசைஞானி இளையராஜா: என்னுடன் நண்பர்கள் போல் பழகியவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் கிடையாது. என் ஆர்மோனியம் மட்டுமே என் உற்ற நண்பனாக இருக்கிறது.
இசையில் அனைத்து செல்வங்களும் உள்ளன. இசையில் வெற்றி தோல்வியே கிடையாது. என்னுடைய விலைமதிப்பற்ற பொருளாக ஆர்மோனியம் பெட்டி உள்ளது. நான் எத்தனையோ பாடல்களுக்கு இசையமைத்து உள்ளேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி பாடல் எதுவும் இதுவரை அமைத்ததில்லை. இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் என் ஆர்மோனியம் ஒரு மாயத்தோற்றமாக உள்ளது. என பேசியுள்ளார்.