மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதமாச்சு! அவரது முன்னாள் காதலிகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் பிரபல வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் என கருத்துக்களும் எழுந்து வந்தது. இந்நிலையில் சுஷாந்தின் மரணம் தொடர்பாக மும்பை பந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சுஷாந்த் இறந்ததில் இருந்து அவரது முன்னாள் காதலிகளான அங்கிதா லோகந்தே மற்றும் ரியா சக்ரபர்த்தி இருவரும் சமூக வலைத்தள பக்கமே வரவில்லை. இந்நிலையில் இன்று சுஷாந்த் இறந்து ஒரு மாதங்கள் ஆனநிலையில், அங்கிதா காலை தன் வீட்டில் விளக்கேற்றி, அதை புகைப்படம் எடுத்து கடவுளின் குழந்தை என இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
மேலும் ரியா தான் சுஷாந்துடன் சேர்ந்து எடுத்த இரு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இன்றுவரை சோகத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை.
காதல் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட நீங்கள்தான் முக்கிய காரணம். எளிமையான கணக்கு ஈக்வேஷன் கூட வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கும் என்பதை நீ எனக்குக் கற்றுக்கொடுத்தாய். நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் இல்லை என்பதை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது.
தற்போது நீங்கள் ஒரு அமைதியான இடத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நிலா, நட்சத்திரங்கள், கோள்கள் ஒரு சிறந்த இயற்பியலாளரை வரவேற்றிருக்கும். இந்த உலகம் கண்ட சிறந்த அதிசயம் நீங்கள்.
நம் காதல் பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்களை இழந்து 30 நாட்கள் ஆகிவிட்டது.
உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் இருக்கிறது என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களும் சோகத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.