மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சமீப நாட்களாக மறைந்த மற்றும் உயிரோடு இருக்கும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹிந்தியில் தான் இது போன்ற அதிக அளவில் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு 'மெயின் அடல் ஹூம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார்.
இதனையடுத்து இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போஸ்டரில் நடிகர் தங்கச்சி திரிபாதி வாஜ்பாய் போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.