மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியின் அடுத்த படத்தில் இணையும் முண்ணனி நடிகர்கள்.. வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பான் இந்தியன் திரைப்படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் செப்டம்பர் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்திய திரைப்படமாக வெளியிடப்படு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.