மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெட்டிசன்களின் அட்டூழியத்தால் கடுப்பான பகத் பாசில்.. தனது இணைய பக்கத்திலிருந்து மாமன்னன் படத்தின் புகைப்படம் அதிரடி நீக்கம்.?
மலையாளத்தில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தமிழில் தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். முதன் முதலில் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படத்திற்கு பின்பு தற்போது தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் பகத் பாஸில். இந்நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தில் பகத் பாஸில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஜாதியின் அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. வடிவேலு மற்றும் உதயநிதி நடிப்பை விட பகத் பாஸிலின் நடிப்பு திறமை பெரிதும் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனயடுத்து பகத் பாசிலின் கதாபாத்திரத்தை ஜாதியை மையப்படுத்தி எடிட் செய்தனர் நெட்டிசன்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதன்படி இப்படத்தின் புகைப்படத்தை தனது கவர் படமாக வைத்திருந்தார் பகத். இந்நிலையில் ஒரு சில ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்று தனது பக்கத்திலிருந்து கவர்ந்த படத்தை அதிரடியாக நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.