மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ள அப்பாஸ் தனது சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் இருந்துவந்தார்.
இந்நிலையில்தான் இயக்குனர் கதிர் தனது படத்திற்காக புதுமுக நடிகர் ஒருவரை தேடிவந்தார். அப்போது அவரது நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆனவர்தான் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ். தமிழில் படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, காதல் வைரஸ், அடிதடி, ஆனந்தம் போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த அணைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் ஆகும்.
இந்நிலையில் இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.