பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
மகன் மிக பெரிய ஹீரோ! ஆனால் அப்பா பேருந்து ஓட்டுநர்!
கன்னட சினிமாவை பொறுத்தவரை மிக குறைந்த பட்ஜெட்டில்தான் படம் எடுப்பார்கள். ஆனால் முதன் முறையாக மிக பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகிறது KGF திரைப்படம். இந்த திரைப்படம் கன்னட சினிமாவை அடுத்த இடத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து மிகவும் பிரமாண்டமாக உருவாகிறது KGF திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.
தமிழில் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, படத்தின் நாயகன் யஷ் அவர்களின் தந்தையை பற்றி ஒரு சுவாரசிய தகவலை கூறினார்.
அதாவது நடிகர் யஷ் இவளோ தூரம் வளர்த்து மிகப்பெரிய நடிகர் ஆகிவிட்டார். ஏற்கனவே நான்கு, ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டார். ஆனாலும் யாஸீன் தந்தை இன்றுவரை பேருந்து ஓட்டுநராகத்தான் உள்ளார் என்று கூறினார்.
தன் மகன் மிக பெரிய நடிகனாக வளர்ந்த பிறகும் தான் செய்து வந்த தொழிலை மறக்காமல் இன்று வரை செய்து வருகிறார் நடிகர் யஷ் அவர்களின் தந்தை.