மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவறாகிப்போன சிகிச்சை.. முகம் வீங்கி பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்த நடிகை சுவாதி, இவர் சில கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகை சுவாதிக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் தனியார் மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்றுள்ளார்.
மருத்துவமனையில் சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து சுவாதியை அதை செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி நடிகை சுவாதி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். இதன்பின்னர், சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.
தனது முகத்தோற்றம் மாறியதால் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார் நடிகை சுவாதி. இந்நிலையில், தவறான மருத்துவ சிகிச்சையால் மருத்துவமனை நிர்வாகம் தனது முகத்தை சிதைத்துவிட்டதாக சுவாதி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுவாதி கூறியுள்ளார்.