மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தட்டிப்போகும் படவாய்ப்பு, திணறும் நடிகை! அட்ஜெஸ்ட் செய்ய அதிரடி முடிவு!
சினிமாவை பொறுத்தவரை என்னதான் திறமையான நடிகையாக இருந்தாலும் புதுமுகங்கள் வர வர பழைய நடிகைகளின் மார்க்கெட் குறைவது வழக்கம்தான். அந்தவகையில் சினிமாவிற்கு வந்த சில வருடங்களே ஆன புதுமுக நடிகை ஒருவருக்கு மார்க்கெட் மிகவும் குறைந்துவிட்டதாம். இதானால் தனது சம்பளத்தில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடிவு செய்துள்ளாராம் இந்த நடிகை.
ஜெயம் நடிகர் நடித்த முதல் படத்தில் அறிமுகமான இவர் அதன் பின் ஒருசில படங்களில் நடித்தாலும் இவரது பெயரை சொல்லும் அளவிற்கு எந்தப்படமும் ஓடவில்லை. கடைக்குட்டிக்கே ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கடைசில் அதுவும் புஸ்ன்னு ஆயிடுச்சு.
மேலும் நாயகிக்கோ பிகினி, டூ பீஸ் போட்டு மாடர்னாக நடிக்கத்தான் ஆசையாம். ஆனால் வாய்ப்புகள் வருது என்னமோ இழுத்து போர்த்திக்கொண்டு நடிக்கும் வாய்ப்புகள்தான். இதனாலும் சற்று வருத்தத்தில் உள்ளாராம் இந்த வணமகள்.
இந்நிலையில் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போக, இவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தாலே நடிக்க நிறையபேர் தயாராக உள்ளதாக அம்மணிக்கு செய்தி வந்துள்ளது. ஓ! இதுதான் விஷயமா? சம்பளம்தான் ஒரு பிரச்னை என்றால்
தனது சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்ய அம்மணி தயாராக உள்ளாராம். அதாவது சம்பளத்தை தற்போதைக்கு குறைத்துக் கொள்ள அவர் ரெடி. சில காலம் சம்பள விஷயத்தில் அடம்பிடிக்காமல் விட்டுக் கொடுத்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டார் போல.