மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. புற்றுநோயால் 2 முறை பாதிக்கப்பட்டு மீண்ட பிரபல நடிகைக்கு மூளையில் ரத்தக்கசிவு.. கோமா நிலையில் கவலைக்கிடம்..!
பிரபலமான மேற்குவங்க நடிகை அந்த்ரிலா ஷர்மா. இவர் 'ஜுமுர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பெங்காளி தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி உட்பட முக்கிய படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென தனிரசிகர் பட்டாளமும் உள்ளது.
இவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டுமுறை அறுவைசிகிச்சை செய்துகொண்டு அதிலிருந்து குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
கோமா நிலைக்கு சென்ற அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து அவரது நெருங்கிய தோழி தெரிவிக்கையில், அவர் உடல்நிலை மோசமானது தொடர்பான செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவள் ஒரு வலிமையான பெண். போராட்ட குணம் கொண்டவள். இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்டுள்ளார். தற்போதும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.