மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.74 லட்சம் பணத்தை ஏமாற்றிய பிரபல நடிகையின் தங்கை..! ச்சே., இவ்வளவு மோசமானவங்களா இவங்க..!!
சென்னையில் உள்ள கேளம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நடிகை அல்போன்சாவின் தங்கை ஷோபா, வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இந்த நிறுவனம் மூலமாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப சில நாட்களுக்கு முன்பு விளம்பரம் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து பலரும் அலுவலகத்திற்கு வந்த நிலையில், அதில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு இன்டர்வியூ நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதனால் அவர்களிடம் இருந்து சோபா 74 லட்சம் ரூபாய் பணம் பெற்ற நிலையில், அது போலி என தெரியவந்துள்ளது.
இதையறிந்த தேர்வானவர்கள் சோபாவின் நிறுவனத்திற்கு சென்று பார்க்கையில் அங்கு அவர் இல்லை. இதன்பின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபல நடிகையின் தங்கை ஷோபா மீது புகாரளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஷோபாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.