மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொகுப்பாளினி தியா மேனனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது : குவியும் வாழ்த்துக்கள்..!
பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் கிரேசி கண்மணி, சுடச்சுட சென்னை மற்றும் கால் மேல காசு போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த தொகுப்பாளினி தியாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தாயும், சேயும் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தியா, "எனக்கு பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று கூறிய நிலையில், அவரது ஆசைப்படியே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் இதனையறிந்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.