மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையுடன் திருமணம்..! புது மனைவி..! 39 வயதில் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பால் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
உடல்நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்றுவந்த பிரபல கன்னட திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உடல்நல குறைவால் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகர் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வயபுத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 19 படங்களில் நடித்துள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2018 ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்றுவந்த சிரஞ்சீவி சார்ஜா கிச்சை பலனின்றி தனது 39 வயதில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மூச்சுத்திணறல் பிரச்னை இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.