காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!! அட.. இவர்தான் இந்த ஹிட் பாடல்களையெல்லாம் எழுதியுள்ளாரா!!
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான 65 வயது நிறைந்த பிறைசூடன் சென்னையில் காலமாகியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் பிறைசூடன். 1985-ம் ஆண்டு எம்.எஸ். விஸ்வநாதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அவர் 400 க்கும் மேற்பட்ட படங்களில் 1400 க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட அவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதி இருக்கிறார். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரையுலகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிறைசூடன் அவர்கள் தமிழில் இன்றும் பலராலும் பெருமளவில் ரசித்து கேட்கப்படும் நடந்தால் இரண்டடி, மீனம்மா மீனம்மா, நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான், சோலைப் பசுங்கிளியே, சைலன்ஸ் இது காதல் செய்யும் நேரம் இது, குண்டு ஒன்று வச்சிருக்கேன், காதல் கவிதைகள் எழுதிடும் நேரம், மணிக்குயில் இசைக்குதடி, இதயமே இதயமே, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, ஆட்டமா தேரோட்டமா போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார்.