திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காமெடி நடிகர் யோகி பாபுவின் மீது மோசடி வழக்கு பதிவு.. திரையுலக வட்டாரம் பரபரப்பு.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் முதன்முதலில் 'யோகி' எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பெற்று யோகி பாபு எனும் பெயர் பெற்றார்.
இப்படத்திற்குப் பின்பு தொடர்ந்து பல காமெடி திரைப்படங்களில் நடித்து வந்தார் யோகி பாபு. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' திரைப்படம் இவரது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது என்று கூறலாம்.
தற்போது காமெடி நட்சத்திரங்களில் முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் வலம் வருகிறார் யோகி பாபு. மற்ற காமெடி நடிகர்களை விட தற்போது அதிக சம்பளத்தை பெற்று வரும் நடிகர் எனும் பெயர் பெற்றவர்.
இது போன்ற நிலையில், யோகி பாபு படத்தில் நடிப்பதற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப்பிற்கும் வராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக பிரபல தயாரிப்பாளர் யோகி பாபுவின் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்கை பதிவு செய்திருக்கிறார். இச்செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.