திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிர் வாழ மாதம் லட்சக்கணக்கில் செலவு.! பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மரணம்.! சோகத்தில் ரசிகர்கள்!!
ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்ட நிலையில் அவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் சங்கையா இயக்கத்தில்
வித்தார்த் நடிப்பில் வெளிவந்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரகுராம். அந்த திரைப்படத்தின் இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரகுராம் சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
ரகுராம் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே amyotrophic lateral sclerosis என்ற Geneti
நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவர் இதற்காக பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவர் உயிர் வாழ மாதம் ஒன்றிற்கு 10 லட்சம் வரை செலவிட வேண்டியிருந்தது.
32 வயது வரையே அவர் வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவர் தனது தன்னம்பிக்கையால் 38 வயது வரை வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டு வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரகுராம் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.