மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்... பிரபல சின்னத்திரை ஜோடிக்கு இரட்டைக் குழந்தைகள்... இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துக்கள்.!
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஸ்வேதா பண்டேக்கர். இவர் அஜித் குமார் நடித்த ஆழ்வார் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். மேலும் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா என்ற நாடகத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் அறியப்பட்டார்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த முருகா என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வந்தது.
இந்நிலையில் ஸ்வேதா கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மற்றும் முருகா தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது. இந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன
தனது இரட்டை குழந்தைகள் விளையாடும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் ஸ்வேதா. அவருக்கும் முருகாவுக்கும் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஆகி வருகிறது