மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2.0 படத்தில் பேசப்பட்ட விஜய்யின் மாஸ் வசனம்! எந்த வசனம் தெரியுமா?
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது 2.0 திரைப்படம். தான் ஒரு பிரமாண்ட இயக்குனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை எமிஜாக்ஸன் நடித்துள்ளார்.
திரைக்கதை, வசனம், பின்னணி இசை, 3D தொழிநுட்பம் என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. 2.0 படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை வாழ்த்தியும், பிரமித்தும் பார்த்து வருகின்றனர். 2.0 படம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மைல்கல்.
இந்நிலையில் 2.0 தளத்தின் விஜய்யின் மாஸ் வசனம் ஓன்று இடம்பெற்றுள்ளது. படத்தில் ரோபோவாக வரும் நடிகை எமி ஜாக்ஸன் தமிழ் படங்கள், டிவி சீரியல்கள் என அனைத்தையும் பார்த்து அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும். யார் என்ன கேட்டாலும் அதற்கு சினிமா பாணியில்தான் பதில் சொல்லும். அந்த வைகையில் ஒரு இடத்தில் தளபதியின் பிரபல டயலாக்கான I AM WAITING என்ற வசனத்தை எமி ஜாக்ஸன் விஜய் போலவே கூறியிருப்பார்.