திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குஷ்பூ வரிசையில் கஸ்தூரி நடுவராகும் சொல்வதெல்லாம் உண்மை 2.0.! பரபரப்புக்கு பஞ்சமில்லை.!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியதோடு சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியாக விளங்கியது சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியானது 2011 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2018 ஆம் வருடம் மே மாதம் வரை நடைபெற்றது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் பிரச்சனைகள் குடும்ப வன்முறைகள் மற்றும் முறையற்ற உறவுகள் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல ஊடகவியலாளர் நிர்மலா பெரியசாமி முதலில் தொகுத்து வழங்கினார். அவரைத் தொடர்ந்து பிரபல நடிகை மற்றும் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை சுதா சந்திரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நடிகை மற்றும் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் போது இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது. இவர் பேசும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்ற வசனம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆன ஒன்று. தற்போது இது போன்ற ஒரு நிகழ்ச்சியை ஜெயா டிவி நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Coming Soon...@KasthuriShankar #Kasthuri #TheervaiThedi #Newshow #JayaTv pic.twitter.com/gQFJNKlp2h
— Jaya TV (@JayaTvOfficial) September 15, 2023
சொல்வதெல்லாம் உண்மை போன்ற ஒரு நிகழ்ச்சி ஜெயா டிவியில் விரைவில் வர இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு தீர்வை தேடி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கஸ்தூரி சங்கர் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஜெயா டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மக்களின் அன்றாட பிரச்சினைகளை இப்பொழுது வெளியில் பேசும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.