மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விழா மேடையில் அபர்ணா முரளியிடம் அத்து மீறிய மாணவர்!
தமிழ் சினிமாவில் சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பால முரளி. இவர் சூரரைப் போற்றுமற்றும் சர்வம் தாள மயம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த மகேஷ்டே பிரதிகாரம் மற்றும் சண்டே ஹாலிடே போன்ற திரைப்படங்கள் புகழ்பெற்றவை.
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இவருடைய நடிப்பிற்கென்றே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
தற்போது இவர் மலையாளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் தங்கம், இந்த திரைப்படமானது வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இதனால் இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் பட குழுவினர்.
இதன் ஒரு பகுதியாக கேரளத்து மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக சென்றுள்ளது பட குழு. அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா முரளிக்கு பூச்செண்டு கொடுத்துள்ளார். அதனை வாங்கிவிட்டு தன் இருக்கையில் அவர் அமரும் போது அவரது தோல் பகுதியில் கை வைத்திருக்கிறார் அந்த மாணவர்.
இதனை சற்றும் எதிர்பாராத அவர் பின் எழுந்து விட்டு மீண்டும் அமர்ந்திருக்கிறார். பின்னர் விழா மேடைக்கு சென்ற அந்த மாணவர் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கை கொடுக்க முயன்றுள்ளார் இதனை அபர்ணா முரளி மறுத்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது .