திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.! அந்த இடத்தில் டாட்டூ தேவையா.? ரசிகர்கள் கமெண்ட்.!!
தமிழ் திரைத்துறையில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் முதன்முதலில் 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்பு 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்திற்கு மேலும் ரசிகர் கூட்டம் அதிகமானது. இவ்வாறு தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
ஆனால் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருவதால், அவ்வப்போது ரசிகர்கள் இவரை திட்டியும் வருகின்றனர். இதனை தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த்திற்கு, தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இது போன்ற நிலையில் பட வாய்ப்பு இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்பில் கண் வடிவத்தை டாட்டூ போட்டு கருப்பு நிற உடையில் எல்லை மீறிய கவர்ச்சியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.