மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தனுசுக்கும் மீனாவுக்கும் பாடி டிமாண்ட்", சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயில்வான்! கடுப்பில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது இவர் பத்திரிகையாளராக யூட்யூப் செய்தி சேனல்களில் பணியாற்றி வருகிறார்.
எப்போதுமே சர்ச்சைக்குரிய செய்திகளை பேசி அதன் மூலம் விமர்சனங்களுக்கு உள்ளாவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் இவர். தற்போது நடிகர் தனுஷ் மற்றும் மீனா ஆகியோரை பற்றி இவர் பேசியிருக்கும் ஒரு வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் நடிகர் தனுஷ் மற்றும் மீனா ஆகியோர் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இவர்கள் இருவருக்கும் இளம் வயது என்பதால் பாடி டிமாண்ட் (உடல் தேவை) இருக்கும் எனக் கூறிய அவர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
யாரைப் பார்த்தாலும் எப்போதும் பாடி டிமாண்ட் இது போன்ற கருத்துக்களை தான் அவர் கூறி வருகிறார். அவர்கள் இருவரும் எப்படி திருமணம் செய்து கொள்வார்கள்? ஒரு சேனலிருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக வைத்திருக்கிறார்கள் தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள்.