மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. ஒரு செல்பிக்காக இப்படியா! ரசிகர்கள் செய்த காரியத்தால் பதறிப்போன நடிகை அனுபமா!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து அவர் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்திருந்தார். அனுபமா மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர்.
மேலும் அவர் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் அண்மையில் அவர் தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அவரைக் காண அங்கு ரசிகர்கள் திரண்டுள்ளனர். அனுபமாவும் காரை விட்டு இறங்கி ரசிகர்களுக்கு கை அசைத்தவாறு சென்று கடையைத் திறந்து வைத்துள்ளார்.
பின்னர் அவர் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது செல்பி எடுப்பதற்காக அவரை ரசிகர்கள் சுற்றி வைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அதையும் தாண்டி அவர் காரில் ஏற முயற்சி செய்தபோது செல்பி எடுக்க முடியாத சிலர் கோபத்தில் காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டுள்ளனர். இதனைக் கண்டு அனுபமா திகைத்து நின்றுள்ளார்.
பின்னர் கடை ஊழியர்களும் போலீசார்களும் அங்கு இருந்த கூட்டத்தை கலைத்து, மற்றொரு காரை வரவழைத்து நடிகை அனுபமாவை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.