#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியாகும் நடிகை நித்யாராமின் படத்தொகுப்பு!. குவிந்துவரும் விமர்சனங்கள்!.
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்ட சீரியலில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்த சின்னத்திரை நடிகை நடிகை நித்யா ராம் பல அனுபவங்களை பகிர்ந்தார். சரியாக தமிழ்ப் பேசத் தெரியாமல் பிரபல தொலைகாட்சியின் "அசத்தல் சுட்டீஸ்" நிகழ்ச்சிக்கு நடுவரா உட்கார்ந்தேன். தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது அந்த நிகழ்ச்சியில் நான், குழந்தைகளின் திறமைகளில் வியந்துப்போனேன். தமிழும் நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன் என கூறுகிறார் நடிகை நித்யா ராம்.
'நந்தினி' சீரியல் நாயகியான இவர், சன் டிவி 'அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சியின் நடுவராக இருந்து நிறைவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ரொம்ப சின்னப் பொண்ணான நான் நடுவரா இருக்கிறது சரியா வருமா? என யோசித்தேன். ஆனால் ஒரு ரசிகையா இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கமென்ட்ஸ் கொடுங்கள் என கூறினார்கள் அப்படித்தான் நானும் வாணி போஜனும் நடுவரானோம் என கூறினார்.
மேலும் வாரத்தில் ஐந்து நாள்கள் சீரியல் ஷூட்டிங் இருக்கும். அதனால் ஏற்படும் வொர்க் பிரஷர், 'அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சி செட்டுக்குள்ள நுழைஞ்சதுமே காணாமல்போய் புது உலகத்தில் உற்சாகமாக இருப்பேன்'' என்கிறார் நித்யா ராம். புதிதாக இவரின் படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.