திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யோசிக்காமல் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் நழுவ விட்டு நிற்கும் சிம்பு.! ரசிகர்கள் வேதனை..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள சிலம்பரசன் என்கின்ற சிம்பு, 2002ம் ஆண்டு இவரது தந்தை டி. ராஜேந்தர் இயக்கிய "காதல் அழிவதில்லை" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2006ம் ஆண்டு தமிழக அரசின் கலை மாமணி விருதினை வென்றுள்ளார் சிம்பு.
தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத் தாண்டி வருவாயா என பல படங்களில் நடித்துள்ள சிம்பு, சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை, இவரால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே நிறுவனத் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பல மாதங்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தும், சிம்புவின் அசால்ட்டான தன்மையால் இந்தப் படத்தை கைவிட்டு சுதா கொங்கரா வேறு படத்தை இயக்கப் போய்விட்டார்.
மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப்போவதாக கடந்த 10 மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னும் அதன் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது. இப்படியே போனால் கூடிய விரைவில் சிம்புவுக்கு சினிமா கேரியரே இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கருத்து நிலவுகிறது.