அட்டகாசமாக இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்! தீயாய் பரவும் ஸ்பெஷல் போஸ்டர்!!



fans-post-special-dp-for-vijay-birthday

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களின் தளபதியாக கொடிகட்டி பறப்பவர் விஜய். இவருக்கென சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது பிறந்த நாட்கள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல கொண்டாடுவர். 

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிறந்தநாள் ட்ரீட்டாக தளபதி 66வது படம் குறித்த தகவல் மற்றும் தளபதி 65 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போதே விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். அதாவது அசத்தலான ஸ்பெஷல் டுவிட்டர் DPயை  உருவாக்கி, அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.